search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் பெண்களிடம் 39 பவுன் நகை கொள்ளை
    X

    மதுரையில் பெண்களிடம் 39 பவுன் நகை கொள்ளை

    மதுரை வெவ்வேறு சம்பவங்களில் பெண்களிடம் 39 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    சென்னை மேற்கு மாம்பழம் லேக்வியூ சாலையைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி (வயது50). சம்பவத்தன்று மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த இவர் பெத்தானியாபுரம் ஆரோக்கியமாதா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென்று சரஸ்வதி கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    மதுரை கண்ணனேந்தல் சென்ட்ரல் காலனியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி வள்ளி (65). இவர் சம்பவத்தன்று அதே பகுதி யில் உள்ள முதியோர் இல்லம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை வழி மறித்த 2 டிப்-டாப் ஆசாமிகள் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்தி கொண்டனர். இருவரும் வள்ளியிடம் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. எனவே நகை அணிந்து செல்ல வேண்டாம் என கூறினர்.

    பின்னர் அவர்கள் வள்ளி அணிந்திருந்த 15 பவுன் நகைகளை வாங்கி ஒரு பேப்பரில் மடித்து வைத்து கொடுப்பதுபோல் கொடுத்து நகையை அபேஸ் செய்தனர். வீட்டுக்கு சென்று பார்த்தபோது அதில் கற்கள், கவரிங் நகைகள் இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    வேலூரைச் சேர்ந்தவர் தெய்வானை (55). இவரது மகள் மதுரை காமராஜர்புரத்தில் உள்ள வைத்தியநாதர் அய்யர் தெருவில் வசித்து வருகிறார்.

    உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக தெய்வானை சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்திருந்தார். மகள் வீட்டில் தங்கி இருந்தபோது வீட்டுக்கு புகுந்த மர்ம நபர் தெய்வானையின் பேக்கில் இருந்த 18 பவுன் நகையை திருடிக்கொண்டு நைசாக தப்பினார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×