search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் காண்டிராக்டர் மீது தாக்குதல்- மனைவி உள்பட 5 பேர் மீது வழக்கு
    X

    மணல் காண்டிராக்டர் மீது தாக்குதல்- மனைவி உள்பட 5 பேர் மீது வழக்கு

    திருமங்கலம் அருகே குடும்ப தகராறில் மணல் காண்டிராக்டர் தாக்கப்பட்டார். அவரது காரும் சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கிராமத்தைச் சேர்ந்தவர் இடும்பன். இவரது மகன் சக்திவேல் (வயது 36) மணல் காண்டிராக்டர். இவருக்கும், வேலம்மாள் என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மகிளா நீதிமன்ற உத்தரவுப்படி சக்திவேல், மனைவிக்கு ரூ.6 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்கி வந்தார்.

    இந்த நிலையில் அந்தப் பகுதியில் நடந்த காதணி விழாவுக்கு சக்திவேல் சிலருடன் சென்றார். அங்கு வந்த வேலம்மாள் அவரது சகோதரர்கள் வடிவேல், காளி உறவினர்கள் முனியாண்டி, தனம் ஆகியோர் சக்திவேலிடம் தகராறு செய்து தாக்கினர். அவரது காரும் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டது.

    தாக்குதலை தடுத்த சக்திவேலின் நண்பர்கள் சதீஷ் பாண்டி, மாயி ஆகியோரும் காயம் அடைந்தனர். 3 பேரும் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சக்திவேல் புகாரின் பேரில், திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வேலம்மாள், வடிவேல் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். வடிவேல், ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    Next Story
    ×