search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே மாயமான 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் தற்கொலை முயற்சி
    X

    கோபி அருகே மாயமான 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் தற்கொலை முயற்சி

    கோபி அருகே மாயமான 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தண்ணீர் பந்தல் புதூரை சேர்ந்த பூபதி என்பவரின் மகள் பவித்ரா (வயது15). முருகேசன் மகள் பவிஸ்ஷினி(15) மேலும் கூகலூரை சேர்ந்த மற்றொரு முருகேசன் என்பவரின் மகள் தர்ஷினி(15).

    மாணவிகள் 3 பேரும் கோபியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    நேற்று சனிக்கிழமை எங்களுக்கு பள்ளியில் ஸ்பெ‌ஷல் கிளாஸ் உள்ளது என கூறி 3 மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். ஆனால் மாலையில் வீட்டுக்கு திரும்பவில்லை.

    பள்ளிக்கு போவதாக கூரிய 3 மாணவிகளும் பள்ளி செல்லவில்லை. நேராக ஈரோட்டுக்கு பஸ்சில் சென்றனர். பிறகு பல இடங்களை பார்த்து விட்டு வரலாம் என ஈரோடு ரெயில் நிலையத்துக்கு சென்றனர். எங்கே செல்வது... எந்த ஊருக்கு போவது..? என தவித்த 3 மாணவிகளும் திடீரென மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் பஸ் ஏறி கோபிக்கே வந்தனர்.

    பள்ளிக்கு போவதாக கூறி வெளியே சென்ற தங்களை பெற்றோர் திட்டு வார்களோ...என பயந்து வீட்டுக்கு போகாமல் அங்கிருந்த ஒரு மண்டபத்தில் தங்கினர்.

    பிறகு திடீரென அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்து பினாயிலை குடித்து விட்டனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு 3 மாணவிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    முன்னதாக மாணவிகளின் பெற்றோர் இது குறித்து கோபி போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் 3 மாணவிகளும் மீட்கப்பட்டு உள்ளனர்.

    கோபி இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் மற்றும் போலீசார் 3 மாணவிகளுக்கும் அறிவுரை கூறி பெற்றோரிடம் சேர்த்து வைத்தனர்.

    Next Story
    ×