search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக உயர்வு
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக உயர்வு

    ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    மீண்டும் காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நேற்று மாலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 184 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 11 ஆயிரத்து 583 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது.

    நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 9 மணிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதமும், மாலை 5 மணிக்கு பிறகு 22 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்தது. வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.

    கோத்திக்கல்- மணல் திட்டு இடையே பரிசல் இயக்கப்படுகிறது. காவிரி கரையோர பகுதிகளில் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள். மெயின் அருவியில் இன்று 55-வது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது. #Hogenakkal #Cauvery

    Next Story
    ×