search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திரா பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் சேதம்
    X

    ஆந்திரா பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் சேதம்

    ஆந்திர பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் சேதம் அடைந்து இருக்கிறது. சித்தூர் மாவட்டம் பொட்டம்மேடு, தில்லமேடு மற்றும் பல பகுதிகளில் கால்வாய் ஓரம் உள்ள சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து சிதறி கிடக்கிறது.
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தில் ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்.

    இதற்காக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இதற்காக வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது. இதில் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர், தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய் உள்ளது.

    தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டிலிருந்து பூண்டி ஏரி இடையே உள்ள 25 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

    இந்த நிலையில் ஆந்திர பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் சேதம் அடைந்து இருக்கிறது. சித்தூர் மாவட்டம் பொட்டம்மேடு, தில்லமேடு மற்றும் பல பகுதிகளில் கால்வாய் ஓரம் உள்ள சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து சிதறி கிடக்கிறது.

    இதேபோல் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. கற்கள், மணல்களும் கால்வாய்க்குள் கிடக்கிறது. இதனால் கால்வாயில் தண்ணீர் செல்வது கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணா கால்வாயில் செல்லும் தண்ணீரை ஆந்திர விவசாயிகளும் பயன்படுத்துகிறார்கள். எனவே கிருஷ்ணா கால்வாயை விரைவில் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

    இதேபோல் தமிழக பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் கடந்து செல்ல சிறு பாலங்கள் உள்ளன. அந்த பாலங்களும் பழுதடைந்து கீழே இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. அதையும் உடனே சீர்செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×