search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அங்கன்வாடி விண்ணப்பம் முறைகேடு - குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் சஸ்பெண்டு
    X

    அங்கன்வாடி விண்ணப்பம் முறைகேடு - குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் சஸ்பெண்டு

    தேனி மாவட்டத்தில் அங்கன்வாடி விண்ணப்பம் முறைகேட்டில் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    கம்பம்:

    தேனி மாவட்டத்தில் 336 அங்கன்வாடி உதவியாளர்கள், 22 குறுஅங்கன்வாடி பணியாளர்கள், 362 குறுஅங்கன்வாடி உதவியாளர்கள் என 720 காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    மொத்தமுள்ள 8 வட்டாரங்களில் விண்ணப்பங்களை ஆராய்ந்து கம்பம் தவிர மற்ற அனைத்து வட்டாரங்களுக்கும் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டு பயனாளிகளுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஒருசில இடங்களில் இரவோடு இரவாக பணி நியமன ஆணை பெண்களிடம் வழங்கப்பட்டதால் அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆனால் கம்பம் வட்டாரத்தில் மட்டும் விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்புவதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    ஒருசில விண்ணப்பங்களில் குறிப்பிட்டவற்றை ஒயிட் மார்க் இட்டு முறைகேடாக மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியதாக கம்பம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் விஜயலட்சுமி மீது புகார் எழுந்தது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் நடத்திய விசாரணையில் விஜயலட்சுமியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் இதில் தொடர்புடைய அலுவலர்களிடம் விசாரணை நடந்துவருவதால் அவர்களிடையே பீதி கிளம்பியுள்ளது.


    Next Story
    ×