search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் மீண்டும் மழை - முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    கேரளாவில் மீண்டும் மழை - முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    கேரளாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    கேரள மாநிலத்தில் கன மழை பெய்தது. இதனால் அந்த மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியிலும் மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.

    அதன்பின்பு மழை குறைந்ததால் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியது. எனவே தற்போது அணையின் நீர்மட்டம் 138.47 அடியாக உள்ளது. நேற்று வரை 947 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.

    இன்று காலை அது 1450 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 2206 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    வைகை அணைக்கு நீர்வரத்து 1777 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2030 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 69.29 அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.76 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 10.4, தேக்கடி 11.4, கூடலூர் 1.7, உத்தமபாளையம் 0.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
    Next Story
    ×