search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை
    X

    ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை

    2-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 20 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் தாழ்வாக பகுதியில் மழை நீர் புகுந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வெயில் வாட்டி வந்தது. மீண்டும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கி விட்டதோ என்ற அளவுக்கு வெயில் கொளுத்தியது.

    இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வந்தனர். ஆனால் இரவு நேரங்களில் குளிர் காற்று வீசி வந்தது.

    இந்நிலையில் ஈரோடு மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் வகையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் லேசான மழை பெய்தது. கவுந்தப்பாடியில் அதிகபட்சமான 8 மி.மீ மழை பெய்ந்தது.

    நேற்றும் 2-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 20 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் தாழ்வாக பகுதியில் மழை நீர் புகுந்தது.

    இதே போன்று தாளவாடி, சென்னிமலை, அம்மாபேட்டை போன்ற பகுதியிலும் மழை பெய்தது. ஈரோடு மாநகரில் நேற்று காலை வெயில் கொளுத்தியது. ஆனால் மதியம் 3 மணிக்கு மேல் கருமேக மூட்டத்துடன் வானம் காணப்பட்டது.

    பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த மழை பெய்ந்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் புகுந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு.-

    வரட்டுப்பள்ளம்-11.8, அம்மாபேட்டை-6.4, ஈரோடு -6, தாளவாடி -4.

    Next Story
    ×