search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலப்பாளையத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி - வாலிபர் கைது
    X

    மேலப்பாளையத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி - வாலிபர் கைது

    நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது பைசல்கான் (31). இவரும் இவரது நண்பர் ஜாகிர் உசேன் ஆகிய 2 பேரும் சேர்ந்து வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வந்தனர்.

    இதில் மதுரை பாண்டி கோவில் பகுதியை சேர்ந்த பிருதிவிராஜ், வெளிநாட்டு வேலைக்காக ரூ. 5 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்தார். ஆனால் அவர்கள் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதுபோல அவர்கள் சுமார் 40 பேரிடம் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக கூறப்பட்டது.

    இதுகுறித்து பிருதிவிராஜ், நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லாவிடம் புகார் செய்தார். இது தொடர்பாக நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி முகமது பைசல்கான், ஜாகிர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் தலைமறைவாக இருந்த முகமது பைசல் கானை நேற்று குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜாகிர் உசேனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×