search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னூர் அருகே ரெயில் நிலையத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்
    X

    குன்னூர் அருகே ரெயில் நிலையத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்

    கோவையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை பாதையில் அமைந்துள்ள ஹில்குரோவ் ரெயில் நிலையத்தை வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வந்த யானைகள் சேதப்படுத்தியது.
    குன்னூர்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் -குன்னூர் மலை ரெயில் பாதையில் ஹில்குரோவ் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை புலிகள், காட்டு எருமை, கரடி, புலி உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக நடமாடி வருகிறது.

    இன்று அதிகாலை அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக ஹில்குரோவ் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அங்கிருந்த குடிநீர் குழாயை அடித்து நொறுக்கியது.

    ரெயில் என்ஜினுக்கு நிரப்ப அங்கு பெரிய இரும்பு தொட்டியில் தண்ணீர் வைக்கப்பட்டு இருந்தது. அந்த இரும்பு தொட்டியையும் உடைத்தது.

    ரெயில் நிலையத்தில் பழங்கால ரெயில் பாகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதனை நொறுக்கி தள்ளியது. ரெயில் நிலைய சுவரை உடைத்து தள்ளியது. தோட்டத்தையும் நாசம் செய்தது.

    ரெயில் நிலையத்தில் 2 ஊழியர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் காட்டு யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால் அவர்களை யானைகள் துரத்தியது.

    அவர்கள் தப்பி சென்று ரெயில் நிலைய அறைக்குள் புகுந்து கதவை பூட்டி கொண்டனர். இதனால் உயிர் தப்பினார்கள். ஹில் குரோவ் ரெயில் நிலையத்தில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது சுற்றுலா பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×