search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலேசியாவில் துன்புறுத்தப்பட்ட நீலகிரி இளைஞர் - தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மீது நடவடிக்கை
    X

    மலேசியாவில் துன்புறுத்தப்பட்ட நீலகிரி இளைஞர் - தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மீது நடவடிக்கை

    மலேசியாவில் நீலகிரி இளைஞர் துன்புறுத்தப்பட்ட செய்தி வெளியான நிலையில், அவரை அங்கு அழைத்துச் சென்ற திருச்சி தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவரது கணவர் ரஜினிகாந்த். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வி 2 மகன்களுடன் நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    திருச்சியை சேர்ந்த ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மலேசியாவில் ஓட்டல் வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்திருந்தது. இதற்காக எனது கணவர் ரஜினிகாந்த் அந்த நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் செலுத்தி வேலைக்கு சேர்ந்தார்.

    மலேசியால் அவருக்கு லாரியில் இருந்து மூட்டைகளை இறக்கும் வேலை கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். இதனால் அந்த நிறுவனம் அவரை வேறு கிளைக்கு மாற்றியது.

    இந்நிலையில் கணவர் செல்போனில் தொடர்பு கொள்ளாததால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நிறுவனத்திற்கு போன் செய்து தகவல் கேட்டேன். ஆனால் அங்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

    எனது கணவரின் நண்பர்கள் சிலர் என்னை தொடர்பு கொண்டு உங்கள் கணவர் சுயநினைவு இழந்த நிலையில் மலேசியாஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ரூ.50 ஆயிரம் கொடுத்தால் தான் அவரை இந்தியாவுக்கு மீட்டு செல்லமுடியும் என்று கூறினர்.

    அதிர்ச்சியடைந்த நான் இது குறித்து வேலைக்கு அனுப்பிய திருச்சி ஏஜென்சியை தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரத்தை கொடுத்து மலேசியால் இருந்து மீட்டு வந்தேன். பின்னர் எனது கணவரை கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளேன்.

    எனது கணவரை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றிய திருச்சியை சேர்ந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மீதும், அவரை துன்புறுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கணவரின் மருத்துவ செலவுக்கு மலேசியா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுத்தரவேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

    கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர் இது தொடர்பாக மேல் விசரணைக்காக திருச்சி போலீசாருக்கு பரிந்துரை செய்தார். மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இது குறித்து தகவல் தெரிவிப்பதாகவும் உறுதியளித்தார்.

    Next Story
    ×