search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலை பெரியகோட்டை, சின்னவீரம்பட்டியில் ரூ.103.16 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் - அமைச்சர் தொடங்கி வைத்தர்
    X

    உடுமலை பெரியகோட்டை, சின்னவீரம்பட்டியில் ரூ.103.16 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் - அமைச்சர் தொடங்கி வைத்தர்

    சின்னவீரம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.103.16 லட்சம் மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்ட பணிகளை பூமி பூஜை செய்து அமைச்சர் உடுமலை. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம், உடுமலை ஊராட்சி ஒன்றியம் பெரியகோட்டை மற்றும் சின்னவீரம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.103.16 லட்சம் மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்ட பணிகளை பூமி பூஜை செய்து அமைச்சர் உடுமலை. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியம் ,பெரியகோட்டை ஊராட்சியில் 2018-2019-ம் ஆண்டிற்கான பொது நிதியிலிருந்து காமராஜர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதல் மாரியம்மன் நகர் வரை ரூ.9.90 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும், மாரியம்மன் நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு ரூ.6.50 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டும் பணியினையும், மாரியம்மன் நகர் மேற்கு பகுதியில் ரூ.9.96 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியினையும்,

    பெரியகோட்டை ஊராட்சி ஓ.எச்.டி. பகுதியில் ரூ.9.70 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும், அரவிந்தர் லே அவுட் பகுதியில் ரூ.9.85 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும் மற்றும் பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.19.40 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும், சின்னவீரம்பட்டி ஊராட்சி, சின்னவீரம் பட்டி ஓ.எச்.டி. முதல் இந்திரா நகர் வரை ரூ.7.90 லட்சம் மதிப்பில் பிரதான பைப் லைன் அமைக்கும் பணியினையும் மற்றும் செஞ்சேரிமலை சாலை குமார் நகர் பிரிவு பகுதியில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும், விஜய் நகர் பிரதான சாலையில் ரூ.5 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும், சேரன் நகர் ஆதி திராவிடர் மயானத்திற்கு ரூ.4.95 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவர் அமைத்து கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினையும் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கும் பணியினையும், விஜய் நகர் பகுதியில் ரூ.4.60 லட்சம் மதிப்பில் வடிகால் கட்டும் பணியினையும் மற்றும் சேரன் நகர் ஆதி திராவிடர் காலனியில் ரூ.4.90 லட்சம் மதிப்பில் வடிகால் கட்டும் பணியினையும் என உடுமலை ஊராட்சிய ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகோட்டை மற்றும் சின்னவீரம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.103.16 லட்சம் மதிப்பிலான புதிய வளர்ச்சித்திட்ட பணிகளை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்து மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சித் திட்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் சி.மகேந்திரன் எம்.பி., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×