search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவராக பதவியேற்பு- முக ஸ்டாலினுக்கு முத்தரசன் வாழ்த்து
    X

    திமுக தலைவராக பதவியேற்பு- முக ஸ்டாலினுக்கு முத்தரசன் வாழ்த்து

    தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Mutharasan
    திருவாரூர்:

    திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி.

    கருணாநிதியை போலவே இளம் வயதில் இருந்தே பொது வாழ்வில் தன்னை அர்ப்பணித்தவர் ஸ்டாலின். கருணாநிதியின் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சமூக நீதியை காக்கவும் ஸ்டாலின் செயல்பட வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    டெல்டா மாவட்டங்களில் காவிரியில் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் செல்லும்போதும் கடைமடைக்கு தண்ணீர் வராததற்கு குடிமராமத்து தூர்வாருதல் போன்றவைகளில் நடைபெற்ற முறைகேடுகளே காரணம். பொதுப்பணித்துறை முற்றிலுமாக தோற்றுவிட்டது. இவ்வளவு தண்ணீர் வந்தும் “கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் பைத்தியக்காரனை போல” விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் மட்டுமல்ல, தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. மத்தியிலுள்ள அரசையும் மாநில அரசையும் தோற்கடிக்கவேண்டிய நிலையில் மாற்றத்திற்கான வழியில் இடதுசாரிகள் உள்ளோம்.

    இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பை செயல்படுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும், இல்லை எனில் இதை காவல் துறையினர் தவறாக பயன்படுத்த நேரிடும்.

    மத்திய அரசை பொறுத்தவரை காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக மாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது. அதன் காரணமாகவே காவிரி விவகாரத்தில் அவர்கள் நல்ல அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை நிறைவேற்றவும் உறுதியாக உள்ளனர். தமிழக அரசு நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க வேண்டும். மத்திய அரசின் சதித்திட்டங்களுக்கு துணை போக கூடாது. இங்கே தூர்வாராமலும், கடைமடைக்கு தண்ணீர் செல்லாமலும் இருக்கிற நிலைகளை பார்க்கும்போது மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு துனை போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அதனை அரசு தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #Mutharasan
    Next Story
    ×