search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: பிளஸ்-2 மாணவியுடன் வி‌ஷம் குடித்த நாகை வாலிபர்
    X

    காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: பிளஸ்-2 மாணவியுடன் வி‌ஷம் குடித்த நாகை வாலிபர்

    நாகை மாவட்டம் அருகே காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ்-2 மாணவியுடன் வாலிபர் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருள்செல்வன். இவரது மகன் பரணிதரன்(வயது 21). இவர் சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி என்ஜினீயரிங் படித்து வந்தார். அப்போது பரணிதரனுக்கு, அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வந்தது. இந்த காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த எதிர்ப்பை மீறி பரணிதரன் பெற்றோர், இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என அந்த பெண்ணின் பெற்றோர் சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இதற்கிடையே மாணவியின் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு இருவரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் பெற்றோருக்கு பயந்து நாகையில் உள்ள உறவினர் வீட்டிற்கு காதல் ஜோடியினர் வந்துள்ளனர். அங்கு வந்த அவர்கள் இருவரும் நாகை காடம்பாடியில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் உயிருக்கு போராடிய இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×