search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதல் - 4 பேர் தீயில் கருகி பலி
    X

    திருச்சியில் மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதல் - 4 பேர் தீயில் கருகி பலி

    திருச்சி மாவட்டம் விராலிமலை அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் சகோதரர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.
    விராலிமலை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள இரட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் விமல்ராஜ் (வயது 24), அருண்பிரசாத் (23), குணசேகரன் (18) மற்றும் ராஜசேகர் (21). இதில் குணசேகரனும், ராஜசேகரும் சகோதர்கள் ஆவர்.

    இவர்கள் 4 பேரும் நேற்றிரவு சுமார் 11.30 மணியளவில் ஒரே மோட்டார்சைக்கிளில் விராலிமலை அருகே லஞ்சமேடு என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக வந்தனர். சாப்பிட்டு விட்டு மீண்டும் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    லஞ்சமேடு பிரிவு சாலையில் இருந்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் ஏறிய போது மதுரையில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சுமார் 120 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்த அந்த ஆம்னி பஸ்சின் அடியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள் சுமார் 200 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது. இதில் பெட்ரோல் கசிந்து சாலையில் கொட்டியதாலும், உராய்வினாலும் அந்த மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது.


    இதில் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த விமல்ராஜ், அருண்பிரசாத், குணசேகரன் ஆகிய 4 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ராஜசேகர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்சு மூலம் ராஜசேகர் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து நடந்த இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், இலுப்பூர் டி.எஸ்.பி. கோபால சந்திரன் ஆகியோர் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் ஆம்னி பஸ் டிரைவர் வேலூர் மாவட்டம் திருவளம் பகுதியைச்சேர்ந்த ஆனந்த் (50) என்பவரை கைது செய்தார்.

    பலியான 4 பேரில் விமல்ராஜ், குணசேகரன், ராஜசேகர் ஆகியோர் படித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தனர். அருண் பிரசாத் மட்டும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இறந்தவர்களின் உடல்கள் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    4 பேரின் உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் கண் கலங்க செய்தது.
    Next Story
    ×