search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் கேரளாவுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள்
    X

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் கேரளாவுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள்

    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் கேரளாவுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    நாசரேத்:

    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஆரம்பக் கட்டமாக திருச்செந்தூர் கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சிஅலுவலர் ஆகியோரிடம் ரூ. 1 லட்சம் மதிப்பில் அரிசி, துண்டு ஆகியவற்றை வழங்கினர்.

    இந்நிலையில் நாலுமாவடி இயேசுவிடுவிக்கிறார் ஊழிய நிறுவனம், புது வாழ்வுச் சங்கம், குட் சமாரியன் கிளப் ஆகியவையும் சேர்ந்து இயேசுவிடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் அறிவுரையின்பேரில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெயின்ஸ்சாம் தலைமையில் 22 பேர் அடங்கிய குழுவினர் இடுக்கி மாவட்டத்திற்கு சென்றுஅங்குள்ள செங்கனூர், சப்பாத்து, வண்டிப்பெரியார், பீர்மேடு, வாளடி, திருவல்லா, பத்தனந்திட்டா போன்ற இடங்களில் சுமார் 2 ஆயிரம் மக்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் ரெயின்கோட், துண்டு, சாரம், தார்பாய், பால்பவுடர், சுடிதார், டி-சர்ட்ஸ், மற்றும் 400 குடும்பங்களுக்கு தேவையானஅத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    இது முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனபொதுமேலாளர் செல்வகுமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×