search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாம்பழத்துறையாறு அணை திறப்பு- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து குறைந்தது
    X

    மாம்பழத்துறையாறு அணை திறப்பு- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து குறைந்தது

    மாம்பழத்துறையாறு அணை கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் இன்று மாம்பழத்துறையாறு திறக்கப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையினால் பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் நிரம்பியது.

    மாம்பழத்துறையாறு அணை கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் இன்று மாம்பழத்துறையாறு திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது. 54.12 அடி கொள் ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் இன்று காலை 54.05 அடியாக இருந்தது. 

    மழை குறைந்தாலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது அது படிப்படியாக குறைந்து வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35 அடியாக இருந்தது. அணைக்கு 2150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது. அணையில் இருந்து 2186 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.20 அடியாக உள்ளது. அணைக்கு 597 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 806 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.
    Next Story
    ×