search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கோழிக்கழிவுகளை ஓடையில் கொட்டிய 2 வாலிபர்கள் கைது
    X

    கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கோழிக்கழிவுகளை ஓடையில் கொட்டிய 2 வாலிபர்கள் கைது

    திசையன்விளை அருகே கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கோழிக்கழிவுகளை ஓடையில் கொட்டிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள பொத்தகாலன் விளை பன்றி பண்ணை அருகே உள்ள ஓடையில் ஒரு லாரியில் இருந்து சிலர் கோழி கழிவுகளை கொட்டினர்.

    கேரள மாநிலத்தில் இருந்து இந்த கோழி கழிவுகளை ஏற்றி வந்து கொட்டியதை அறிந்த முதுமொத்தன்மொழி கிராம நிர்வாக அலுவலர் இசக்கியப்பன் திசையன்விளை போலீசாரிடம் புகார் செய்தார்.

    சம்பவ பகுதிக்கு திசையன்விளை போலீசார் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இது தொடர்பாக போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தனசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கேரள மாநிலத்தில் இருந்து கோழிக்கழிவுகளை கொட்டியதாக அந்த மாநிலத்தை சேர்ந்த இருமக்குழி மேக்கரை மனோரஞ்சித் (வயது 34), அசின்பாபு (26) ஆகிய 2 பேரை கைது செய்தார். கோழி கழிவுகளை ஏற்றி வந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், லாரி உரிமையாளர் சிவாஜி(40) என்பவரை போலீசார் தேடிவருகின்றனர். #tamilnews
    Next Story
    ×