search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னூர்- ஊட்டி வரை நீராவி என்ஜின் ரெயில் இயக்க நடவடிக்கை- சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் பேட்டி
    X

    குன்னூர்- ஊட்டி வரை நீராவி என்ஜின் ரெயில் இயக்க நடவடிக்கை- சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் பேட்டி

    குன்னூரிலிருந்து ஊட்டி வரை நீராவி என்ஜின் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஊட்டி மலை ரெயில் முக்கிய இடம் பெறுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை 46.5 கிலோமீட்டர் கொண்ட இந்த மலை ரெயில் பாதையின் இரு புறங்களிலும் அழகிய இயற்கை காட்சிகள் காணப்படுகின்றன. இதில் மலை ரெயில் பயணத்தின்போது வனப்பகுதியில் உலாவும் காட்டு விலங்குகள் கண்டு ரசிக்கலாம்.

    மலைப்பாதை தண்டவாளத்தில் பல் சர்க்கரம் மூலம் ரெயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. செங்குத்தாக செல்லும் இந்த தண்டவாளத்தில் ரெயில் பயணம் செய்வது திரிலான அனுபவம். இதை ரசிக்கவே சுற்றுலா பயணிகள் மலை ரெயில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஆசியாவிலேயே ஊட்டி மலை ரெயிலில் தான் பல்சக்கர தண்டவாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய அந்தஸ்து வழங்கியுள்ளது.

    இந்நிலையில் தென்னக ரெயில்வே சேலம் கோட்ட மேலாளர் சுப்பா ராவ் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணிமனை மற்றும் பழமை வாய்ந்த என்ஜின் அமைந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு ரெயில் நிலையத்தின் விரிவாக்கத்தையும் மற்றும் அங்கு நடைபெறும் பணிகளை குறித்தும் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது.

    ஊட்டியிலிருந்து கேத்தி வரை விடுமுறை நாட்களில் சிறப்பு ரெயில் விடப்பட்டு அதில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது தொடர் அரசாங்க விடுமுறை நாட்களில் சிறப்பு ரெயில் ஊட்டியில் இருந்து கேத்திவரை இயக்கப்படும். நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார் வரை இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளுக்காக குன்னூரில் இருந்து ஊட்டி வரை பழமை மிக்க நிலக்கரி நீராவி என்ஜின் இயக்கப்படும். தற்போது குன்னூர் ரெயில் நிலையத்தில் செல்பி படம் எடுக்க செல்பிஸ்பாட் உடன் வியூ பாய்ண்ட் சுற்றுலா பயணிகள் படம் எடுக்க அமைக்கப்படும்.

    மேலும் அங்கிருந்த பழமை வாய்ந்த நீராவி என்ஜின் பணிமனைகளையும் அங்கு அமைக்கப்படும் சிறப்பு பூங்காவையும் பார்வையிடும் வகையில் அமைக்கப்படும். ரன்னிமேடு ரெயில் நிலையத்தை புதுப்பித்து அங்கு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பதற்காகவும் மற்றும் நவீன இருக்கை வசதிகள் செய்யப்பட்டு செல்பி ஸ்பாட் அமைக்கப்படும். அக்டோபர் மாதம் முதல் மலைரெயில் கட்டணம் உயர்த்தப்படுவது சுற்றுலா பயணிகளுக்கு இந்த கட்டண உயர்வு பெரிதும் பாதிக்காது. குன்னூர் மேட்டுப்பாளையம் வரை செல்ல கூடிய பயணிகளுக்கு டிக்கெட்டுகள் குன்னூரில் இருந்தும் வாங்கி செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×