search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம் - எய்ம்ஸ் டாக்டர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை
    X

    ஜெயலலிதா மரணம் - எய்ம்ஸ் டாக்டர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் இன்று எய்ம்ஸ் டாக்டர்கள் 2-வது நாளாக விசாரணை ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். #Jayadeathprobe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 80-க்கும் அதிகமான பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்களான இதயவியல் நிபுணர் நிதிஷ்நாயக், நுரையீரல் நிபுணர் கில்நானி, மயக்கவியல் நிபுணர் அஞ்சன் டிரிகா ஆகியோர் நேற்று காலை விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் நீதிபதி பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட முறையில் எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அளித்த சிகிச்சையை மேற்பார்வையிட்டோம் என்றும் தெரிவித்தனர்.



    ஜெயலலிதா சுவாசிக்க மிகுந்த சிரமப்பட்டார். அவர் பெரும்பாலான நேரங்களில் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசத்தில் இருந்தார் என்றும் கூறி இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து இன்று எய்ம்ஸ் டாக்டர்கள் 2-வது நாளாக விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    இந்த குறுக்கு விசாரணை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. #Jayadeathprobe

    Next Story
    ×