search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியர்கள் நிர்மலாதேவி-முருகன் ஜாமீன் மனுக்கள் விசாரணை தள்ளிவைப்பு
    X

    பேராசிரியர்கள் நிர்மலாதேவி-முருகன் ஜாமீன் மனுக்கள் விசாரணை தள்ளிவைப்பு

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி-முருகன் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை 27-ந்தேதிக்கு தள்ளிவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #NirmalaDevi
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசியதாக கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் 3 பேரும் ஜாமீன்கேட்டு பலமுறை மனுதாக்கல் செய்தனர். சாத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.

    கருப்பசாமி மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு 2 முறை தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. அப்போது நீதிபதிகள் மாணவிகள் தொடர்பான இந்த வழக்கை சாதாரணமாக கருதமுடியாது.


    வழக்கில் கைதானவர்களை விசாரணை முடிவடையும் வரை ஜாமீனில் விடக்கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை மார்ச் மாதத்துக்குள் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் பேராசிரியர்கள் நிர்மலாதேவி, முருகன் ஆகியோர் ஜாமீன்கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். #NirmalaDevi
    Next Story
    ×