search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்
    X

    வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்

    வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் 9 கிலோ மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரெயில் தண்ட வாளம் அமைக்கு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.

    பயணிகள், பொதுமக்கள் இடையே மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    வடசென்னை பகுதியில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரெயில் வழித்தட பாதை அமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை வழியாகவும், 7 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட பாதை வழியாகவும் மெட்ரோ ரெயில் வழித்தடம் உருவாக்கப்படுகிறது. சுரங்கப்பாதையில் 2 ரெயில் நிலையங்களும், உயர்மட்ட பாதையில் 7 ரெயில் நிலையங்களும் கட்டப்பட்டு வருகிறது.

    வண்ணாரப்பேட்டை - கொருக்குப்பேட்டை இடையே 2 கிலோ மீட்டர் தூரத்துக்கான சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது தண்டவாளம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்பணிகள் நிறைவடையும்.

    வண்ணாரப்பேட்டை - விம்கோநகர் மெட்ரோ ரெயில் பணிகள் 2020 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் 9 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையும், 7 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட பாதையாகவும் மெட்ரோ ரெயில் வழித்தடம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 2020 மார்ச் மாதத்துக்குள் இப்பணிகள் அனைத்தும் நிறைவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    Next Story
    ×