search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாவலூர் ஓ.எம்.ஆர். சாலையில் மதுக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு
    X

    நாவலூர் ஓ.எம்.ஆர். சாலையில் மதுக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு

    நாவலூர் ஓ.எம்.ஆர். சாலையில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மதுக்கடையை திறக்க அனுமதிக்க கூடாது என்று மனு கொடுத்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் நாவலூர் கிராமம் ஓ.எம்.ஆர். ராஜீவ் காந்தி சாலையில் டாஸ்மாக் மதுக்கடையை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மதுக்கடையை திறக்க அனுமதிக்க கூடாது என்று மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    நாவலூர் ஓ.எம்.ஆர். சாலையில் அமைந்திருந்த மதுபானக்கடையை அரசின் ஆணைப்படி 220 மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டிய கடை 50 மீட்டர் துரத்தில் இருந்ததால் மூடப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் 60 மீட்டர் தொலைவில் கொண்டு வருகிறார்கள்.

    மதுக்கடை திறக்க உள்ள பகுதியில் ஐ.டி. கம்பெனி உள்ளது. அதில் பெண்கள் வேலை செய்து விட்டு வெளியே வருவதற்கு பயப்படுகிறார்கள். மேலும் சுங்க சாவடியும் அங்கு இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.

    எனவே அங்கு மதுபானக்கடையை திறக்க அனுமதித்க கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாவலூர் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் நிர்வாகிகள் முனுசாமி, கீதா, மற்றும் கிராம மக்கள் கூட்டமாக சென்று மனுவை கொடுத்தனர்.

    மேலும் நாவலூரில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என பொது நல வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
    Next Story
    ×