search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை
    X

    தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை

    மீன்பிடிக்க சென்ற தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் திரும்பி வராதது குறித்து விசாரணை நடத்தியதில், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது. #TNFishermen
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அந்தோணி (வயது35), ரூபிஸ்டன், வில்பிரட் (55), விஜய் (29), ஆரோக்கியம் (35) வினோத் (35), ரமேஷ் உள்ளிட்ட 8 பேர் கடந்த 18-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதன் பிறகு அவர்கள் திரும்பி வரவில்லை.

    இதுபற்றி விசாரித்த போது இலங்கை கடல் எல்லை பகுதியில் அவர்கள் மீன்பிடித்ததாக கூறி அங்குள்ள கடற்படையினர் சிறை பிடித்தது தெரியவந்தது. இலங்கையில் வத்தலக்குண்டு என்ற இடத்தில் வைத்து கடற்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதுபற்றி தூத்துக்குடியில் உள்ள அவர்களது உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.


    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மூலமாக மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி மீனவர்கள் கூறும்போது, ‘ஏற்கனவே தூத்துக்குடி கடலில் முன்பு போல் மீன்கள் கிடைப்பதில்லை. சற்று தொலைவில் சென்று மீன் பிடித்தால் இலங்கை கடற்படை தங்கள் எல்லை பகுதி என கூறி பிடித்து சென்று விடுகிறார்கள்.

    இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்’ என்றனர். #TNFishermen
    Next Story
    ×