search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசிய காட்சி.

    தமிழ்நாடு திவாலாகும் நிலையில் உள்ளது- ராமதாஸ் வேதனை

    இன்னும் கொஞ்சம் நாளில் தமிழ்நாடு திவாலாகும் நிலையில் உள்ளதாக ஆற்காட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் வேதனையாக தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss #ADMK
    ஆற்காடு:

    ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் 30-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் ஆற்காடு பஸ் நிலையத்தில் நடந்தது. அப்போது ராமதாஸ் பேசியதாவது:-

    ஆட்சியாளர்களுக்கு பணம் கொடுப்பது மணல் தான். பால் போல் ஓடும் ஆற்றை எப்போது பார்ப்பது. நாம் ஆட்சிக்கு வந்தால் தான் பார்க்கலாம். ஒரு கிலோ மணல் கூட எடுக்க விட மாட்டோம்.

    பாலாற்றில் வெள்ளைக்காரன் காலத்தில் கட்டிய ஒரே ஒரு தடுப்பணை புதுப்பாடியில் தான் உள்ளது. பாலாற்றில் எப்போதும் தண்ணீர் செல்ல வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். தோல் கழிவுகளை பாலாற்றில் விட்டு பாழாக்கி விட்டனர். ஒரு சொட்டு சாராயம் கூட தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. பெண்கள் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும். குடியை ஒழிக்க வேண்டும் என்பது எனது ஆசை. இப்போது நடைபெறுவது ஊழல் ஆட்சி. அன்புமணி முதல் அமைச்சராக வந்தால் தான் ஊழல் இல்லாத ஆட்சி இருக்கும். தமிழ்நாட்டிற்கு நிறைய திட்டங்கள் வைத்துள்ளார். வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ஒரு கோடி பேருக்கு வேலை வழங்க உள்ளார்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மழைநீர் கூட கடலுக்கு செல்லாது. அதை அமல்படுத்த வேண்டும் என்றால் வாக்காளர் மனது வைக்க வேண்டும். நீங்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. பணம் வாங்க மாட்டோம் என வாக்காளர்கள் நினைக்க வேண்டும்.


    50 ஆண்டுகள் 2 திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டை நாசம் செய்து விட்டன. புரையோடி கிடக்கின்ற தமிழ்நாட்டை அன்புமணி தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தமிழ்நாட்டை மத்திய அரசு ஆட்டுவிக்கிறது. பினாமி அரசு ஆடுகிறது. சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை வழக்கு இன்று(நேற்று) விசாரணைக்கு வந்தது. அதனால் 7 ஆயிரம் குடும்பம் பாதுகாக்கப்பட்டது.

    இன்னும் கொஞ்சம் நாளில் தமிழ்நாடு திவாலாகும். ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. ஒவ்வொரு தனி மனிதன் தலையிலும் ஒரு லட்சம் ரூபாய் கடன் உள்ளது. ஒரு நாளைக்கு ரூ.170 கோடி வட்டி கட்டுகின்றனர். இந்த அரசு தேவையா?, மாற்றம் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMK #Ramadoss #ADMK
    Next Story
    ×