search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை
    X

    ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை

    மேட்டூர் அணை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது அணைக்கு 80 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. #MetturDam #Cauvery
    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்த கனமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இதனால் காவிரி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அந்த அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. 2 அணைகளில் இருந்தும் இன்று காலை தண்ணீர் திறப்பு 97 ஆயிரத்து 858 கன அடியாக குறைக்கப்பட்டது.

    ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்தது. 

    அணையில் இருந்து நேற்று 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 50 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    எனினும், நீர்வரத்து தொடர்ந்து 80 ஆயிரம் கன அடியாக இருந்ததால் மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 65 ஆயிரம் கன அடியாக உள்ளது.  #Metturdam #Cauvery
    Next Story
    ×