search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுருளி அருவிக்கு 8-வது நாளாக குளிக்க தடை
    X

    சுருளி அருவிக்கு 8-வது நாளாக குளிக்க தடை

    மழை குறைந்து வந்தபோதும் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கம்பம்:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் கொட்டி தீர்த்த கன மழையால் இடுக்கி, வயனாடு, எர்ணாகுளம், கொச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றன.

    இந்த மழையின் காரணமாக தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் எதிரொலித்தது. கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது மழை படிப்படியாக குறைந்து வந்தபோதிலும் சுருளி வனப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் 8-வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு மழை முற்றிலும் நின்றுவிட்டதால் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. எனவே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவியில் ஆனந்தமாக நீராடி சென்றனர்.
    Next Story
    ×