search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ. 13½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்- மினிலாரி டிரைவர் கைது
    X

    ரூ. 13½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்- மினிலாரி டிரைவர் கைது

    தொப்பூர் டோல்கேட் அருகே வாகன சோதனையில் ரூ. 13½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மினி லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் வழியாக தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற பொருட்கள் கடத்தி செல்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின் பேரில் தொப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று இரவு குறிஞ்சி நகர் டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்று வேகமாக வந்தது. உடனே அந்த லாரியை தடுத்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் ஏறி சோதனை செய்ததில் மொத்தம் 90 பண்டல்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் லாரியை பறிமுதல் செய்தும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாத்துபட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு (வயது42) என்பது தெரியவந்தது. இந்த புகையிலை பொருட்களை பெங்களூரில் இருந்து மினிலாரி மூலம் தஞ்சாவூருக்கு கொண்டு செல்வேன். பின்னர் அங்கு லோடு இறக்கி விட்டு வண்டியில் வாடகை மட்டும் வாங்கி விட்டு வந்து விடுவேன். இதே போல் நான் 2 லோடு பெங்களுரில் இருந்து தஞ்சாவூருக்கு கொண்டு சென்றேன்.

    இதையடுத்து புகையிலை பொருட்களை வினியோகம் செய்ய தஞ்சாவூரில் இருந்து மற்றொரு இடத்திற்கு மினிவேன் மூலம் ஏற்றி கொண்டு அனுப்புகின்றனர். பெங்களூரில் மார்க்கெட்டு உள்ளது அந்த மார்க்கெட்டில் இருந்து தான் நான் புகையிலை லோடு ஏற்றினேன் என்று தெரிவித்தார்.

    இது குறித்து தொப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். #tamilnews
    Next Story
    ×