search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிந்தக்குடி ஊராட்சி பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தால் கிராம மக்கள் அவதி
    X

    கோவிந்தக்குடி ஊராட்சி பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தால் கிராம மக்கள் அவதி

    கோவத்தக்குடி ஊராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின்அழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள டியூப் லைட்டுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் எரிவதில்லை மின் விசிறி, உள்பட அத்தியாவசிய மின் சாதனங்கள் சரிவர இயங்காமல் உள்ளன.

    மெலட்டூ:

    அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், கோவத்தக்குடி ஊராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின்அழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள டியூப் லைட்டுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் எரிவதில்லை மின் விசிறி, கிரைண்டர் உள்பட அத்தியாவசிய மின் சாதனங்கள் சரிவர இயங்காமல் உள்ளன. இதனால் தினசரி கிராமமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

    கோவத்தக்குடி கிராமம் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் கடந்த ஓராண்டாக குறைந்த மின்அழுத்தம் காணப்படுகிறது. இதன் காரணமாக வீடுகளில் பயன்படுத்தக்கூடிய டியூப்லைட்டுகள், கிரைண்டர் மிக்சி ஆகியவை பயன்படுத்த முடியாதநிலை உள்ளது அதுமட்டுமல்லாது குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டார்களும் பயன்படுத்த முடியாமல் தினசரி பலமணி நேரம் மின்சாரம் இல்லாமலும் அவதிபடுகிறோம். இதனால் கிராமத்தில் தண்ணீர் தட்டுபாடு நிலவுகிறது. கோவத்தக்குடி கிராமத்திற்கு 1978-ல் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது அப்போது கிராமத்தில் ஒரே ஒரு மின் டிரான்ஸ்பர்மர் மட்டுமே இருந்தது தற்போது 3 டிரான்ஸ்பர்மர் அமைக்கப்பட்டும் குறைந்த மின்சாரம்தான் கிடைக்கிறது.

    கிராமத்தில் பலஇடங்களில் மரங்கள் போடப்பட்டுள்ள டியூப்லைட் விளக்குகள் கூட எரிவதில்லை. தெருக்களில் ஆங்காங்கே போடப்பட்டுள்ள ஒன்று, இரண்டு எல்.ஈ.டி. பல்புகள் மட்டுமே எரிவதாகவும், இதனால் தெருக்கள் இரவு நேரங்களில் இருள்மூடி காணப்படுகிறது.

    கிராமத்தில் உள்ள மின்பாதையில் ஏராளமான மரங்கள் உள்ளது. இவை அனைத்தும் மின் கம்பிகள் மீது சாய்ந்த நிலையில் உள்ளதால் மின் அழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது.

    எனவே மின்வாரியம் குறைந்த மின்அழுத்தம் போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×