search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்தது - 140 அடியாக குறைந்த பெரியாறு அணை
    X

    நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்தது - 140 அடியாக குறைந்த பெரியாறு அணை

    நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாக குறைந்தது.
    கூடலூர்:

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என கேரள முதல்வர் வலியுறுத்தினார்.

    ஆனால் தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த வி‌ஷயத்தில் தமிழக உரிமைய விட்டு கொடுக்க முடியாது. எனவே 142 அடி வரை நீர் தேக்கப்படும் என தெரிவித்தார். இருந்தபோதும் 141 அடி வரையே நீர் தேக்கப்பட்டது.

    இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். பேபி அணையை வலுப்படுத்தி பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    தற்போது மழை ஓய்ந்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 3890 கன அடியாக குறைந்துள்ளது. தமிழக பகுதிக்கு 2206 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 140 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 69 அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.85 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 10 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 117.91 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் 3 கன அடி.

    பெரியாறு 2.4, தேக்கடி 2, கூடலூர் 2.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×