search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய டிராக்டர் - மாட்டு வண்டி பறிமுதல்
    X

    சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய டிராக்டர் - மாட்டு வண்டி பறிமுதல்

    சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் மற்றும் செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்று பகுதியில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், இந்த தடையை மீறி இரவு நேரங்களிலும், அதிகாலை வேளையிலும் டிப்பர் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.

    இந்த மணல் கடத்தலால் சில சமயங்களில் கொலையிலும் முடிந்து விடுகிறது. வில்லியனூர் பகுதியில் இது போன்று 3-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து மணல் கடத்தலை முற்றிலும் தடுக்க வில்லியனூர் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வில்லியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் நேற்று இரவு ஆரியபாளையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர் சேந்தநத்தம் பகுதியை சேர்ந்த எழிலரசன் (21) என்பதும், இவர் வில்லியனூர் சங்கரா பரணி ஆற்றில் இருந்து மணலை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து எழிலரசனை கைது செய்தனர்.

    இதுபோல் டிராக்டரில் மணல் கடத்தி வந்த கணுவாய்பேட்டை புதுநகரை சேர்ந்த முத்து (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியை வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×