
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை கமிஷன் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
வாக்குமூலம் கொடுத்தவர்களிடம் சசிகலாவின் வக்கீல்கள் குறுக்கு விசாரணையும் நடத்தி உள்ளனர்.

அதில், வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்து விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission