search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள மக்களுக்கு உதவ கோயம்பேடு வியாபாரிகள் மூட்டை மூட்டையாக காய்கறி வழங்கினர்
    X

    கேரள மக்களுக்கு உதவ கோயம்பேடு வியாபாரிகள் மூட்டை மூட்டையாக காய்கறி வழங்கினர்

    கேரள மக்களுக்கு உதவுவதற்காக கோயம்பேடு வியாபாரிகள் வழங்கும் காய்கறிகள் லாரிகள் மூலம் கேரளாவில் உள்ள அன்னதான சத்திரத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. #KeralaRains #KeralaFloods
    சென்னை:

    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை-வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.

    இவர்களுக்கு உதவ இந்தியாவில் உள்ள மக்கள் மட்டுமல்ல வெளிநாடுகளில் வசிப்பவர்களும் உதவி செய்து வருகின்றனர்.

    அங்கு முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு 3 நேரமும் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு வியாபாரிகளும் தன்னால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மொத்தம் 1889 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து ஒவ்வொரு வியாபாரிகளும் மூட்டை மூட்டையாக உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, கோஸ், கேரட், காலிபிளவர் என தங்களிடம் உள்ள காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    காய்கறி மார்க்கெட் சங்க தலைவர்கள் தியாகராஜன், சந்திரன், தனஞ்செழியன் ஆகியோர் கடை கடையாக காய்கறி மூட்டைகளை சேகரித்து லாரிகளில் அனுப்பி வருகின்றனர்.

    இதுபற்றி தியாகராஜன் கூறுகையில், “மார்க்கெட்டில் ஒவ்வொரு கடைக்காரர்களும் 1 மூட்டை, 2 மூட்டை, 5 மூட்டை அளவுக்கு இலவசமாக காய்கறிகள் தருவதாகவும் அதனால் 150 மூட்டை அளவுக்கு (6 டன்) சேர்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

    ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் துரைசங்கர் லாரி மூலம் இவற்றை கேரளாவில் உள்ள அன்னதான சத்திரத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார். #KeralaRains #KeralaFloods

    Next Story
    ×