search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி மருந்துகள் கேரளாவுக்கு உதவி - அமைச்சர் அறிவிப்பு
    X

    தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி மருந்துகள் கேரளாவுக்கு உதவி - அமைச்சர் அறிவிப்பு

    தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். #Keralasouthwestmonsoon #Keralarain

    சென்னை:

    கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு மழை-வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    வெள்ளத்தால் ஏற்படக் கூடிய தொற்று நோய்களை தடுப்பதற்கும், மருத்துவ சிகிச்சை மேற் கொள்வதற்கும் 25 லட்சம் டாக்சி சைக்கிளின் மாத்திரைகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் (ஆன்டிபயாடிக்ஸ்), 5 லட்சம் குளோர்பெனர மின் மாத்திரைகள், 1 லட்சம் களிம்புகள், பிற அத்தியாவசிய மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.


    மேலும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக 6 லட்சம் எண்ணிக்கையிலான கை உறைகள், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக குளோரின் மாத்திரைகள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட மொத்தம் 1 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன.

    மேலும், எல்லையோர மாவட்டங்களாகிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப் பணிகளுக்கு கேரள, தமிழ்நாடு எல்லையோர மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கிடு மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மேற்கண்ட தகவலை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    Next Story
    ×