search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- கலெக்டர் வலியுறுத்தல்
    X

    கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- கலெக்டர் வலியுறுத்தல்

    வைகை அணை நீர் மட்டம் 66 அடியை எட்டியுள்ளது. எனவே ஆற்றங்கரையோரப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க கோரி கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.

    மதுரை:

    கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.

    தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    142 அடி வரை நீர் தேக்கி வைக்க முடியும் என்பதால் அதற்கு பிறகு வரும் நீர் இடுக்கி அணைக்கும், குழாய் மூலம் வைகை அணைக்கும் திருப்பி விடப்படுகிறது.

    தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகைக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    தற்போது அணையின் நீர்மட்டம் 66 அடியை தாண்டியுள்ளது. முழு கொள்ளளவான 71 அடியை இன்னும் ஓரிரு தினங்களில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வைகை அணை நீர் மட்டம் 66 அடியை எட்டியுள்ளது. விரைவில் முழு கொள்ளளவை தாண்டியவுடன் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். எனவே மதுரை மாவட்டத்தில் ஆற்றங்கரையோரப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகிறேன்.

    தண்ணீரை திறக்கும் போது குளிக்கக்கூடாது. கால்நடைகளை ஆற்றின் அருகே மேய்ப்பதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×