search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டப்பிடாரம் அருகே மாவட்ட அளவிலான கபடி போட்டி
    X

    ஓட்டப்பிடாரம் அருகே மாவட்ட அளவிலான கபடி போட்டி

    ஓட்டப்பிடாரம் அருகே மாவட்ட அளவிலான கபடி போட்டி காமராஜர் திடலில் நடந்தது.

    ஒட்டப்பிடாரம்:

    ஒட்டப்பிடாரம் அருகே உள்ள ராஜவின்கோவில் கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி காமராஜர் திடலில் நடந்தது. புதியம்புத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாதவராஜ் தலைமை தாங்கினார். போட்டியில் 45 அணிகள் கலந்து கொண்டன. போட்டியை தி.மு.க ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சண்முகையா தொடங்கி வைத்தார்.

    இறுதி போட்டியில் நடுகூட்டுடன்காடு அணியும், நடுவக்குறிச்சி அணியும் மோதின. இதில் நடுகூட்டுடன் காடு அணி வெற்றி பெற்றது. இந்த அணிக்கு ரூ. 15ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. 2-வது பரிசு பெற்ற நடுவக்குறிச்சி அணிக்கு ரூ.13 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையும், 3-வது பரிசு பெற்ற புதியம் புத்தூர் காளிமுத்துராஜா அணிக்கு ரூ.10 ஆயிரமும், 4-வது பரிசு பெற்ற ராஜவின்கோவில் கபடி கிளப் அணிக்கு ரூ. 8 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஒட்டநத்தம் 18-ம் படி கருப்பசாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 2-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. போட்டிக்கு மணியாச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். போட்டியில் 52 அணிகள் கலந்து கொண்டன.

    இறுதி போட்டியில் ஒட்ட நத்தம் அணியும், புதியம் புத்தூர் அணியும் மோதின. இதில் ஒட்டநத்தம் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு ரூ.12 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. 2-வது பரிசு பெற்ற புதியம்புத்தூர் அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. 3-வது பரிசு பெற்ற ராஜவின் கோவில் அணிக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு புதிய தமிழகம் முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் விஜயபாண்டியன், ரெயில்வே ஊழியர் வெங்கடேஷ் உட்பட பலர் பரிசு வழங்கினார்கள்.

    Next Story
    ×