search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்
    X

    5 மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்

    தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Rain #MeteorologicalCentre
    சென்னை:

    கேரளா, கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ள தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் மழை பெய்து அணைகள், ஏரி, குளங்கள் நிரம்பின.



    இந்த 5 மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கன மழையானது அடுத்து 24 மணி நேரத்துக்கு நீடிக்கும். ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் பரவலாக மழை பெய்யும்.

    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 17 செ.மீ., தேனி மாவட்டம் பெரியாறு, நீலகிரி நடுவட்டம் ஆகிய இடங்களில் 12 செ.மீ., நீலகிரி ஜி.பஜாரில் 11 செ.மீ., செங்கோட்டையில் 9 செ.மீ., பொள்ளாச்சியில் 7 செ.மீ., பாபநாசம், மணிமுத்தாறு, கூடலூர் (தேனி), குழித்துறை, பேச்சிப்பாறையில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

    செங்கல்பட்டில் 4 செ.மீ., காஞ்சீபுரம், உத்திரமேரூர், கேளம்பாக்கத்தில் 3 செ.மீ. மழையும் சோழவரம், மதுராந்தகம், பொன்னேரி, பள்ளிப்பட்டு, வாலாஜா, தாம்பரத்தில் 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. #Rain #MeteorologicalCentre

    Next Story
    ×