search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே தனியார் பஸ்-வேன் மோதி 18 பேர் படுகாயம்
    X

    ஆண்டிப்பட்டி அருகே தனியார் பஸ்-வேன் மோதி 18 பேர் படுகாயம்

    ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் தனியார் பஸ்-வேன் மோதிய விபத்தில் விவசாயிகள் உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளை தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயம் சார்ந்த கண்காட்சியை பார்வையிட மதுரை மற்றும் விருதுநகர் பகுதிக்கு 6 வேன்களில் அழைத்து செல்லப்பட்டனர். விருதுநகரில் இருந்து நேற்று மாலை தேனிக்கு புறப்பட்டனர்.  

    இரவு 7.45 மணியளவில் தேனி-மதுரை மாவட்ட எல்லையான கணவாய் மலைப்பகுதியில் வந்த போது கம்பத்தில் இருந்து மதுரை நோக்கி வேகமாக வந்த ஒரு தனியார் பஸ் விவசாயிகள் சென்ற ஒரு வேனில் மோதியது. 

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த தர்மாபுரியை சேர்ந்த விவசாயிகள் வேல்முருகன்(44), காளிமுத்து(75), முருகன்(50), சுரேஷ்(28), மாயாண்டி(64), முத்துவேல்(27), அழகர்(43), குணசேகரன்(47), தெய்வேந் திரன்(49), பிருந்தாவனம்(47) போடியை சேர்ந்த வேன் டிரைவர் ஆண்டிச்சாமி(43) ஆகியோரும், தனியார் பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த கோதண்டராமன்(35), வடுகபட்டியை சேர்ந்த பாண்டியன் (40), பெரிய குளத்தை சேர்ந்த சேகர்(52), ஆண்டிப்பட்டி ஏத்தகோவிலை சேர்ந்த ஜெயராமன்(40), கண்டம னூரை சேர்ந்த மணி கண்டன்(45), உசிலம்பட்டியை சேர்ந்த மகேஷ்வரி(32), மேல்மங்கலத்தை சேர்ந்த நீலமேகம்(66) ஆகிய 18 பேர் படுகாயம் அடைந்தனர். 

    இந்த விபத்து குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×