search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம்-திருவள்ளூரில் சுதந்திர தின விழா
    X

    காஞ்சீபுரம்-திருவள்ளூரில் சுதந்திர தின விழா

    சுதந்திரதினவிழா இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதேபோல் காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்திலும் சுதந்திரதின விழா சிறப்பாக நடைபெற்றது. #independenceday
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா தேசியக்கொடியேற்றினார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டார். காவல் துறையினர், ஊர்க்காவல்படையினர், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். 

    இதைத்தொடர்ந்து பல்வேறு அரசுத்துறைகளின் சார்பினில் 272 பயனாளிகளுக்கு ரூ1.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு அரசுத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 10 பேருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுதெரிவித்தார். விழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்களின் வண்ணமிகு கலை நிகழ்ச் சிகள், வீர தீர சாகச நிகழ்ச் சிகள் நடந்தது. 

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், சப் கலெக்டர்கள் ராஜூ, முத்துவடிவேல், மாலதி, சந்திரசேகரன் மற்றும் பல்துறை அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் நகராட்டசி அலுவலக வளாகத்தில் நகராட்சி கமிஷனர் சர்தார் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். காஞ்சீபுரம் மண்டல இணைபதிவாளர் அலுவலகத்தில் இணை பதிவாளர் சந்திரசேகரன் தேசியக் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் துணை பதிவாளர் சங்கர், சரக துணை பதிவாளர் வேணு, அலுவலர்கள் உமாபதி, ராஜநந்தினி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    காஞ்சிபுரம் கூட்டுறவு ஒன்றிய அலுலவகத்தில் மேலாண்மை இயக்குனர் கோதண்டராமன் தேசியக் கொடியேற்றினார். காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் சங்க தலைவர் வள்ளிநாயகம் தேசியக் கொடியேற்றினார். சங்க துணை தலைவர் ஜெயந்திசோமசுந்தரம், இணை இயக்குனர் சாரதி சுப்புராஜ் மற்றும் சங்க இயக்குனர்கள் கலந்து கொண்டனர். காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பினில் மாவட்டத் தலைவர் காஞ்சி.ஜீவி. மதியழகன் தேசியக் கொடியேற்றினார்.

    செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி ராமணாதின் தேசிய கொடியை ஏற்றினார். நீதிபதிகள் கீதாராமன், செங்கல்பட்டு வக்கீல் சங்க தலைவர் சொக்கலிங்கம் உள்பட 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை பேரூர் செயல் அலுவலர் குணசேகரன் ஏற்றினார். இதில் இளநிலை உதவியாளர் முரளி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன் தேசிய கொடியை ஏற்றினார்.

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் கலெக்டர் சுந்தரவல்லி  தேசியக்கொடி ஏற்றி வைத்து  மரியாதை செலுத்தினார். மேலும், மூவர்ண்ண பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களை பறக்கவிட்டார். இதைதொடர்ந்து, காவல் துறையினர், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.


    பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்தும், பரிசுகள் வழங்கியும் கலெக் டர் கவுரவித்தார். மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். 

    வருவாய் துறை, முன்னாள் படை வீரர் நலத்துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை, சமூக நலத்துறை,  தாட்கோ, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த் துறை, வருவாய்த்துறை சமூக பாதுகாப்பு திட்டம்  ஆகிய துறைகள் மூலம் மொத்தம் 83 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 134 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்  சிறப்பாக பணி புரிந்த அரசு அலுவலர் களுக்கு  நற்சான்றுகளையும் கலெக்டர் சுந்தரவல்லி வழங்கினார்.

    விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச் சிகள் நடந்தன. நிகழ்ச்சியில், மாவட்ட  போலீஸ் சூப்பி ரண்டு பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தில்லைநடராஜன், சிலம்பரசன்  கலந்து கொண்டனர்.

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் தேசிய கொடியை அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் கோ.அரி ஏற்றி வைத்தார். கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணயர் சிவாஜி, நிர்வாகிகள் ஜெயசேகர், பாபு, வேலஞ்சேரி பழனி மற்றும் அலுவலக ஊழியர்கள் உடன் இருந்தனர். #independenceday 
    Next Story
    ×