search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் 7 மையங்களில் இந்தி தேர்வை 4 ஆயிரம் பேர் எழுதினர்
    X

    கோவையில் 7 மையங்களில் இந்தி தேர்வை 4 ஆயிரம் பேர் எழுதினர்

    கோவையில் 7 மையங்களில் நடைபெற்ற இந்தி தேர்வை 4 ஆயிரம் பேர் எழுதினர்.
    கோவை:

    தமிழ்மொழி தவிர இந்தி, பிரெஞ்சு உள்ளிட்ட பிறமொழிகளை படிக்கும் ஆர்வம் மாணவ-மாணவிகளிடம் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது அங்குள்ள மொழிப்பாடங்கள் குறித்து தெரிந்து கொண்டு சேர்க்கின்றனர். மேலும் இந்தி படிக்கும் ஆர்வம் இளைஞர்களிடமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தமிழ்நாடு தட்ஷண பாரத இந்தி பிரசார சபை சார்பில், இந்தி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு ஆண்டு தோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இந்தி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தியில் பிராத்மிக், மத்தியமா, ராஷ்டிரபாஷா, பிரவேஷிகா, விஷாரத் பூர்வார்த், விஷாரத் உத்தார்த், பிரவீண் பூர்வார்த், பிரவீண் உத்தார்த் ஆகிய பாடங்கள் உள்ளன.

    இதில் பிராத்மிக், மத்தியமா, ராஷ்டிரபாஷா தேர்வுகள் கடந்த 5-ந் தேதி நடந்தது. பிரவேஷிகா, விஷாரத் பூர்வார்த், விஷாரத் உத்தார்த், பிரவீண் பூர்வார்த், பிரவீண் உத்தார்த் ஆகிய பாடங்களுக்கான முதல் தாள் தேர்வு நேற்றுமுன்தினம் காலையிலும், 2-ம் தாள் தேர்வு மாலையிலும் நடைபெற்றது.

    3-ம் தாள் தேர்வு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நடந்தது. இந்த தேர்வை 4 ஆயிரம் பேர் எழுதினர். இதற்காக கோவை காந்திபுரம் சுகுணா ரிப் மேல்நிலைப்பள்ளி, காந்திபார்க் மாரண்ணகவுண்டர் மேல்நிலைப்பள்ளி, சுங்கம் கார்மல் கார்டன் பள்ளி உள்பட 7 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. 
    Next Story
    ×