search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளித்தலை அருகே மாட்டுவண்டி மீது சுற்றுலா வேன் மோதியதில் தொழிலாளி பலி - 2 மாடுகள் உயிரிழப்பு
    X

    குளித்தலை அருகே மாட்டுவண்டி மீது சுற்றுலா வேன் மோதியதில் தொழிலாளி பலி - 2 மாடுகள் உயிரிழப்பு

    குளித்தலை அருகே மாட்டு வண்டி மீது சுற்றுலா வேன் மோதியதில் தொழிலாளி பலியானார். மேலும் இந்த விபத்தில் 2 மாடுகள் செத்தன.
    தோகைமலை:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பரளியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு தனது மாட்டு வண்டியில் மகள் கனகவள்ளியை (35) அழைத்துக்கொண்டு குளித்தலை சாந்திவனம் அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு மணல் அள்ள சென்றார்.

    மணல் அள்ளிய பின்னர் ஊருக்கு மாட்டு வண்டியில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். கனகவள்ளியை மாட்டு வண்டியின் பின்புறம் நடந்து வரசொல்லி விட்டு மாட்டு வண்டியை ஆறுமுகம் ஓட்டி கொண்டு வந்தார். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குளித்தலை சாந்திவனம் அருகே வந்த போது கரூரில் இருந்து திருநள்ளாருக்கு சென்ற சுற்றுலா வேன் மாட்டு வண்டி மீது மோதியது. இதில் மாட்டு வண்டியை ஓட்டிய ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    மேலும் மாட்டு வண்டியின் 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே செத்தன. மேலும் மாட்டு வண்டியின் பின்புறம் மாட்டு வண்டியை பிடித்து கொண்டு நடந்து வந்த ஆறுமுகத்தின் மகள் கனகவள்ளியும் பலத்த காயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகத்தின் பிணத்தை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் காயம் அடைந்த கனகவள்ளி மற்றும் சுற்றுலா வேனில் வந்து காயம் அடைந்த பயணிகள் கரூர் அருகே புலியூரில் உள்ள அமராவதி நகரை சேர்ந்த சிவக்குமார் (24), ராமச்சந்திரன் (24), லட்சுமிகாந்தன் (24), மாயவன் (38) ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து கனகவள்ளி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து கரூர் வெங்கமேட்டை சேர்ந்த வேன் டிரைவர் சதீஸ்பாபு (45) என்பவரை கைது செய்தனர். 
    Next Story
    ×