search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தின விழா- கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    சுதந்திர தின விழா- கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    சுதந்திர தின விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கோவை:

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் தீவிரவாதிகள் ஊடுருவி சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர் குலைக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனால் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனையடுத்து தமிழகத்தில் சுதந்திர தின விழா நடைபெறும் இடம், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் ஆகியவற்றில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    கோவையில் சுதந்திர தின விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை சோதனை செய்து வருகின்றனர்.மேலும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களை மாவட்டத் தில் உள்ள 11 சோதனை சாவடிகளில் நிறுத்தி சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

    ரெயில் நிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சோதனை தீவிர சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக் கின்றனர்.மேலும் பிளாட் பாரங்களில் சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×