search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டுமன்னார்கோவில் அருகே திருமண விழாவுக்கு வந்த 16 பேரை வெறிநாய் கடித்து குதறியது
    X

    காட்டுமன்னார்கோவில் அருகே திருமண விழாவுக்கு வந்த 16 பேரை வெறிநாய் கடித்து குதறியது

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. விழாவுக்கு வந்த 16 பேரை வெறிநாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது லால்பேட்டை. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.

    இதில் அந்த பகுதியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ரோட் டில் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வெறிநாய் வந்தது. அந்த நாய் திடீரென்று ரோட்டில் நடந்து சென்ற அப்துல்ரகுமான் (65) என்பவரை கடித்து குதறியது. இதனால் அவர் கூச்சல் போட்டு அலறினார். அதனைத்தொடர்ந்து அந்த வெறிநாய் ரோட்டில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதில் யாசன்பீவி(85), அப்துல்ஹமீது(55), முகமதுஷபீர், ஆசைத்தம்பி உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர். 

    காயம் அடைந்த அனைவரும் காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 5 பேர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, லால்பேட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக நாய்கள் மற்றும் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் ரோட்டில் செல்பவர்களையெல்லாம் விரட்டி கடிப்பதால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×