search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
    X

    நாகர்கோவிலில் அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

    அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதிகாரிகள் டார்ச்சர் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் கட்டையன்விளையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது54). ராணித்தோட்டம் பனிமனையில் ராதாகிருஷ்ணன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நாகர்கோவிலில் இருந்து சென்னை, கோவை செல்லும் அரசு பஸ்களை இயக்கி வந்தார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கு நாகர்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் பஸ்களை இயக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் சம்பவத்தன்று வீட்டில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராதாகிருஷ்ணன் விஷம் குடித்து இருப்பதை கண்டு பிடித்தனர். அதற்காக தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி ராதாகிருஷ்ணனின் மகன் ஸ்ரீராம், ஆசாரி பள்ளம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது தந்தையை அதிகாரிகள் நெல்லை வழித்தட பஸ்களை இயக்க கூறியதால் மனம் உடைந்து காணப்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் விஷம் குடித்ததாகவும் கூறி இருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராதாகிருஷ்ணன் சாவுக்கு அதிகாரிகளின் டார்ச்சர் காரணமா? என்றும் விசாரணை நடக்கிறது.
    Next Story
    ×