search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து நடைபயணம்
    X

    மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து நடைபயணம்

    திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் திண்டுக்கல் உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் சொத்து வரி 100 சதவீதம் வரை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால் வாடகை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. ஏழைகளின் மீது திணிக்கப்படும் இந்த வரி உயர்வை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2 நாட்கள் நடைபயணம் தொடங்கியது.

    திண்டுக்கல் மரியநாதபுரத்தில் தொடங்கிய இந்த நடை பயண பிரசாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாநிலக் குழு நிர்வாகி பாண்டி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், நகர செயலாளர் ஆசாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மரியநாதபுரத்தில் தொடங்கி குள்ளனம்பட்டி, ராஜலெட்சுமிநகர், நாகல்நகர் சந்தை, ஆர்.வி.நகர், முகமதியாபுரம், பேகம்பூர் சவேரியார்பாளையத்தில் இன்றைய பிரசாரம் நிறைவடைகிறது. நாளை திருமலைசாமிபுரத்தில் தொடங்கி ரவுண்டு ரோடு, அபிராமி நகர், கோபால்நகர், ஒய்.எம்.ஆர்.பட்டி பஸ்நிலையம், மணிக்கூண்டு, நந்தவனம் ரோடு, நாராயணபிள்ளை தோட்டம் வழியாக காமராஜர்புரத்தில் நிறைவடைகிறது.
    Next Story
    ×