search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் புகளூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
    X

    கரூர் புகளூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

    புகளுர் பேரூராட்சியில் உள்ள கடைகளில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் கப்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    தமிழ்நாடு அரசு வருகிற ஜனவரி முதல்தேதி முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துதல், சேமிப்பு வைத்தலை தடை செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டரின் அறிவுரைகளின் படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காகித ஆலை புகளுர் பேரூராட்சியில் உள்ள கடைகளில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைமற்றும் பிளாஸ்டிக் கப்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

    பின்னர் அவற்றிற்கு பதிலாக  செய்தித்தாள் காகிதங்கள், வாழை மற்றும் பாக்கு மட்டை  மூலம் செய்யப்பட்ட பொருட்கள், பனியன்  துணிகள், கைப்பை மற்றும் கூடைகள் ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தினர். 

    நிகழ்ச்சியின் போது பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், இளநிலை உதவியாளர் முருகேசன், துப்புரவு மேற்பார்வையாளர்  மற்றும் துப்புரவு பணியாளர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×