search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் எழுத்தாளர்கள் மாநாடு - மத்திய மந்திரி ஸ்மிருதிராணி தொடங்கி வைக்கிறார்
    X

    புதுவையில் எழுத்தாளர்கள் மாநாடு - மத்திய மந்திரி ஸ்மிருதிராணி தொடங்கி வைக்கிறார்

    புதுவையில் 17-ந்தேதி நடைபெறும் எழுத்தாளர்கள் மாநாட்டை மத்திய மந்திரி ஸ்மிருதிராணி பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.
    புதுச்சேரி:

    அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் லலித்வர்மா, இன்டலோகோ இயக்குனர் பார்த்தா ஹரிஹரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை எழுத்தாளர்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் வகையில் தி.பாண்டி லிட் பெஸ்ட் என்ற தலைப்பில் 3 நாட்கள் மாநாடு நடத்த உள்ளோம். இந்த மாநாடு 17-ந்தேதி மாலை புதுவை கடற்கரை சாலை காந்தி திடல் அருகே தொடங்க உள்ளது.

    மாநாட்டில் மத்திய மந்திரி ஸ்மிருதிராணி பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 80-க்கும் மேற்பட்ட அறிவியல், வரலாறு, கலை, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு நூலாசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர். இதில் புதுவையில் இருந்து 24 எழுத்தாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

    மாநாட்டில் 50 சதவீத புதுவை எழுத்தாளர்கள் மற்றும் அமிஷ்திரிபாதி, கிட்டுரெட்டி, மைக்கேல் டேனியோ, பஞ்சாங்கம் உள்பட பலர் பங்கேற்கின்றனர். மேலும் 35 புத்தகங்கள் வெளியாகின்றன. நாளொன்றுக்கு 12 நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதுஅரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வு. அரசியலுக்கு தொடர்பில்லை. எழுத்தாளர்கள், இலக்கிய கலாச்சாரத்துக்காகவே இந்த மாநாடு நடக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×