search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஜினில் பழுது - ஊட்டி மலை ரெயில் 1 மணி நேரம் தாமதம்
    X

    என்ஜினில் பழுது - ஊட்டி மலை ரெயில் 1 மணி நேரம் தாமதம்

    என்ஜினீல் ஏற்பட்ட பழுது காரணமாக ஊட்டி மலை ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இயற்கை எழில் சூழ்ந்து வன பகுதி வழியாக இந்த ரெயில் இயக்கப்படுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த மலை ரெயிலில் பயணம் செய்து இயற்கை காட்சிகளை கண்டு களித்து வருகிறார்கள்.

    இந்த ரெயில் தினமும் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளைத்தில் இருந்து புறப்படும். அதன்படி இன்று காலை 6.30 மணிக்கு மலை ரெயில் என்ஜினை இயக்க முயன்றனர்.

    அப்போது இயங்கவில்லை. அதன் ஜெனரேட்டரில் பழுது ஏற்பட்டது தெரிய வந்தது. ரெயில்வே தொழில் நுட்ப ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு என்ஜினீல் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது.

    இந்த பணி காலை 8 மணிக்கு முடிவடைந்தது. அதன் பின்னர் ரெயில் பெட்டிகளுடன் என்ஜின் இணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 8.20 மணிக்கு மலை ரெயில் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது. ஒரு மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக ரெயில் புறப்பட்டது.

    இதில் 200 பயணிகள் பயணம் செய்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள்.

    Next Story
    ×