search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1.73 கோடி உண்டியல் வசூல்
    X

    திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1.73 கோடி உண்டியல் வசூல்

    திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மூலம் ரூ.1.73 கோடி காணிக்கை வசூலானது.
    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.

    ஆடிக்கிருத்திகை திருவிழாவில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துக் கொண்டதால் கடந்த 1 வார காலத்தில் உண்டியல் வசூல் எண்ணும் பணி திருக்கோவில் மண்டபத்தில் கோயில் தக்கார் வே. ஜெய சங்கர், இணை ஆணையர் செ.சிவாஜி ஆகியோர் முன்னிலையில் 2 நாட்களாக நடைபெற்றது.

    பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய ரூபாய் நோட்டுகள், சில்லரை என தனித்தனியாக தரம் பிரித்து எண்ணப்பட்டது. இதில் ரூ. 1.73 கோடி ரொக்க பணம், 371 கிராம் தங்கம், 15,664 கிராம் வெள்ளி நகைகள் ஆகியவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

    Next Story
    ×