search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொறியியல் பிரிவு பணி காரணமாக திருச்சி - தஞ்சை வாராந்திர பயணிகள் ரெயில் ரத்து
    X

    பொறியியல் பிரிவு பணி காரணமாக திருச்சி - தஞ்சை வாராந்திர பயணிகள் ரெயில் ரத்து

    பொறியியல் பிரிவுக்கான பணி நடைபெறுவதால் திருச்சி-தஞ்சை, தஞ்சை-திருச்சி இடையே ஓடும் பயணிகள் ரெயில் வருகிற 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முழுமையாக இயக்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
    திருச்சி:

    திருச்சி ரெயில்வே கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் பொறியியல் பிரிவுக்கான பணி நடக்கிறது. அதையொட்டி, திருச்சி-தஞ்சை, தஞ்சை-திருச்சி(வண்டி எண்:76824/76827) இடையே ஓடும் பயணிகள் ரெயில் 3 சனிக்கிழமைகளில், அதாவது வருகிற 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முழுமையாக இயக்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலி-மயிலாடுதுறை, மயிலாடுதுறை-திருநெல்வேலி (வண்டிஎண்: 56822/56821) இடையே ஓடும் பயணிகள் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16234) ரெயில், ஆலக்குடி-தஞ்சை இடையே நடக்கும் பணி காரணமாக இன்று(புதன் கிழமை) முதல் 31-ந் தேதிவரை 60 நிமிடம் தாமதமாக வந்து மயிலாடுதுறையை சென்றடையும். சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ் பிரஸ்(வண்டிஎண்:12635) ரெயில், 18-ந் தேதி, 20-ந் தேதி மற்றும் 21-ந் தேதி ஆகிய 3 நாட்கள் வழக்கமான நேரத்தை விட 20 நிமிடம் தாமதமாக திருச்சியை வந்தடையும். சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினல்-நாகர்கோவில் ஜங்ஷன் வாராந்திர எக்ஸ்பிரஸ்(வண்டி எண்:16351) ரெயில் 12-ந் தேதி, 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் அரியலூர் மற்றும் திருச்சிக்கு 15 நிமிடம் தாமதமாக வந்து சேரும்.

    மேலும் காரைக்கால்-திருச்சி இடையே ஓடும் பயணிகள் ரெயில்(வண்டி எண்:56711) 11-ந் தேதி முதல் 16-ந் தேதிவரை காரைக்காலில் வழக்கமாக பகல் 12.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 45 நிமிடம் தாமதமாக, அதாவது 1.15 மணிக்கு புறப்படும்.

    மேற்கண்ட தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×